தீவிரவாதிகள் வெறிக்கு 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீர் தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு மூன்று குடும்பத்தை சேர்ந்த 15 முஸ்லீம்கள் பலியாகியுள்ளனர்.

ஜம்முவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சலோசி கிராமத்தில் மூன்று குடும்பத்தை சேர்ந்த 15 பேரை பிரிவினைவாதிகள் சுட்டுக்கொன்றதுடன்அவர்களின் வீட்டையும் தீ வைத்து கொளுத்தினர்.

மலைக்கிராமமான இதன் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களான அப்துல், ஷஃபி, பஸீர் ஆகியோரின் வீட்டில் சனிக்கிழமை பிற்பகல் சம்பவம் நடந்துள்ளது.தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்கள் கருகிக் கிடந்துள்ளன.

வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநகர் காவல் நிலையம் மீது லஸ்கர்-இ-தொய்பா மற்றும் அல்-உமர்-முஜாகிதீன் அமைப்புகளின் தற்கொலைப் படையினர்தாக்குதலில் 9 போலீஸார் இறந்துள்ள நிலையில் அடுத்த நாளே இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கக் கூடியது.

கடந்த வாரம் தான் ஸ்ரீநகர் அருகே மேஜோர் நகரில் 6 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவங்கள் மீண்டும் தீவிரவாதிகள் வன்முறைவெறியாட்டம் ஆடுவதை குறிக்கின்றது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+