புத்துயிர் பெறுமா தனுஷ்கோடி?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி நகரம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று கருதப்படுகிறது.

பழைய துறைமுக நகரான தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. 1964 புயலால்பாதிக்கப்பட்ட பின்னர் கப்பல் போக்குவரத்து மட்டுமல்ல மக்கள் நடமாட்டமும் இன்றி இருந்தது.

தற்போது சேது சமுத்திரத்திட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்கள்தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி தங்களது யாத்திரையை நிறைவு செய்வது வழக்கம்.

குடிக்க டீ கூட கிடைக்காத இன்றைய தனுஷ்கோடியை காண சுற்றுலா பயணிகள் பலர் வருகின்றனர். கடல் வாழ் உயி+ரினங்கள் பற்றி அறிய மாணவர்கள்பலர் கல்விச் சுற்றுலா வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக, நாட்டிலேயே முதன்முறையாக கடலில் அமைக்கப்பட்ட பழைய ரயில் பாதையை சரிசெய்து மீண்டும் ரயில் வசதி செய்ய வேண்டும்என்று ராமேஸ்வரம் மக்கள் கூறுகின்றனர்.

பாம்பனுக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே உள்ள வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை தனுஷ்கோடி வரை நீடித்தால் சுற்றுலா பயணிகளுக்குவசதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் கடல் பாசிகள் உள்ளிட்ட கடல் வளம் அதிகம் உள்ளது. இங்குள்ள கடல் பாசிகள் மற்றும் கடலில் விளையும் ஒருவகை காலிஃபிளவர்ஆகியவற்றை வணிக ரீதியில் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் கடல் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் பல்வேறு வகையான நீர்விளையாட்டு மையங்கள் அமைப்பதின் மூலம் சுற்றுலாப்பயணிகளை கவர முடியும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+