ஸ்ரீகட்டழகிய சிங்கர் கோவிலில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம் (திருச்சி):
திருச்சி, ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீகட்டழகிய சிங்கர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகநடந்தது.
இந்தக் கோவில், ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. ஏராளமான பக்தர்கள் கோவில்கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சிஸ்ரீரங்கம் பிரிவு தலைவர் தன்ராஜ் ஆகியோரும் கும்பாபிஷேகத்தைக் கண்டு களித்தவர்களில் சிலர்.
கோவில் புனரமைப்புக் குழுத் தலைவர் வி.வெங்கட்ராமன் கூறுகையில், ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில்கும்பாபிஷேகம் மார்ச் 15-ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்கான புதுப்பிக்கும் பணிகள் ரூ. 3 கோடிசெலவில் நடந்து வருகின்றன. விரைவில் இவை முடிவடையும்.
பொதுமக்களும் ஏராளமான அளவில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications