பூகம்பம்: 200 பேருக்கு காப்பீடு தொகை அளித்தது எல்.ஐ.சி
டெல்லி:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூன்று கோடி ரூபாய் அளவிற்கு 200 பாலிசிகளுக்கான காப்பீட்டுத் தொகை வழங்கபட்டதாக எல.ஐ.சி.யின்வடக்கு மண்டல மேலாளர் சந்திரசேகரன் திங்களன்று தெரிவித்தார்.
மூலதனச்சந்தைக்கு ஏற்ற பீமா பிளஸ் என்ற புதிய பாலிஸி திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்திப் பேசிய அவர், இதுவரை இழப்பீட்டுத் தொகை கேட்டுவிண்ணப்பித்துள்ள 500 பாலிஸிதாரர்களில் 200 பாலிஸிதாரர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பூகம்பம் பாதித்த பகுதிகளிலிருந்து 13,000விண்ணப்பங்கள் வரை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 200 கோடி ரூபாயாகும்.
புதிய பீமா பிளஸ் திட்டத்தில் மூன்று வகை உள்ளது. பாதுகாப்பான திட்டத்தின்கீழ் குறைந்தது 10சதவீதம் வரை பங்குகளில் முதலீடு செய்யப்படும்.இரண்டாவது திட்டத்தின் கீழ் 30 சதவீதம் வரை பங்குகளில் முதலீடு செய்யப்படும். மூன்றாவது திட்டத்தின் கீழ் 50 சதவீதத்திற்கும் மேல் பங்குகளில்முதலீடு செய்யப்படும்.
திட்டத்தின் காலவரையான பத்தாண்டுகளுக்குள் இரண்டு முறை திட்டங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு. பீமா பிளஸ் திட்டத்தின் கீழ் செலுத்தும்தொகைக்கு வருமான வரி பிரிவு 88 ன் கீழ் ரிபேட் உண்டு என்றும் தெரிவித்தார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
