பூகம்பத்திற்குக் காரணம் டி.வி?
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பலியானது மனித உயிர்கள் மட்டுமல்ல பூகம்பத்திற்கு காரணம் என்றுமுத்திரை குத்தப்பட்ட டி.வி.க்களும்தான்.
பூகம்பத்திற்குப் பின் கஜோரி வலி மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதகுருமார்கள் இருவர் கூறுகையில்,இயற்கையின் இந்த சீற்றத்திற்கு எல்லாம் காரணம் பாழாய்ப் போன இந்த டி.வி.க்கள் தான் என்றதால்அஹமதாபாத் மற்றும் சூரத் பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்கள் பலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை தெருவில்போட்டு உடைத்தனர் என்றனர்.
கூட்டத்தில் பங்கு பெற்ற துணி வியாபாரியான அல்டாப் முகமது ஹூசைன் மன்சூரி பத்திரிக்கையாளர் ஒருவரிடம்கூறிய போது பூகம்பத்திற்கு காரணம் கடவுளின் கோபம் தான் என மக்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். பலமாடிக்கட்டிடங்கள் சீட்டுக் கட்டு போல் விழுகின்றன. இது போல் மீண்டும் கடவுளின் கோபத்திற்கு ஆளாகவிரும்பவில்லை என்றார்.
சூரத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய மெளலானா சையது கலீல் அஹமது ரந்தேரி, அல்லாவின் கோபத்தால் தான்பூகம்பம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் டி.வி.க்கள் தான் என்றார்.
இக்கூட்டத்தில் பங்கேற்றதால் தனது டி.வியை நொறுக்கிய நூர்முகமது சந்திவாலா கூறும் போது, எனதுகுழந்தைகள் ஹிந்தி படங்களையும், தொடர்களையும் விரும்பி பார்ப்பர். இது அவர்களின் மனதைகெடுத்துவிட்டது. எனவே அதனை உடைத்து விட்டேன் என்றார்.
மெளலானா ரந்தேரி என்பவர் கூறுகையில், தான் கூறியதால் மக்கள் டி.விக்களை உடைக்கவில்லை, இஸ்லாத்தில்சொல்லியுள்ளபடி மக்கள் நடக்கின்றனர் என்றார்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் என்பது போல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்தங்களை தைரியபடுத்தி கொள்ள ஒவ்வொரு காரணங்களை கண்டுபிடிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் மக்கள் வேதங்களையும்,குரானையும் படிக்கின்றனர். கடவுளின் கோபத்திலிருந்து தப்பிக்க இது தான் வழி என்று அவர்கள்எண்ணுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications