விபத்தில் சிக்கிய அதிரடிப்படை
கோவை:
வீரப்பனைப் பிடிப்பதற்காக கர்நாடக அதிரடிப்படையினர் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 21 வீரர்கள் காயம்அடைந்தனர்.
தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும்அதிரடிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வீரப்பன் கும்பல் நீலகிரி மலைப்பகுதிகளுக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில்அதிரடிப்படையினர் நீலகரி மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக அதிரடிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் 21 பேர் ஆனைக்கட்டி,சின்னதடாகம் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பில்லூர் காட்டுப்பகுதியில் தேடுதல்வேட்டை நடத்துவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அங்கிருந்த மலை கிராம மக்களிடம் பில்லூர் செல்வதற்கு வழி கேட்டனர். அவர்கள் சொன்ன வழியில்அதிரடிப்படையினர் வேனைத் திருப்பினார்கள். பெரும்பள்ளம் என்ற இடத்தின் அருகே வந்த போது வேன்திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன் அருகில் இருந்த மலைதடுப்பு சுவற்றில் மோதி நின்றது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 21 வீரர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இவ்விபத்து குறித்துஉடனடியாக அதிரடிப்படையினரின் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியவில்லை.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சுகுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று முள்ளி செக் போஸ்ட்டைஅடைந்தார். பின்னர் அங்கிருந்து வனத்துறைக்கு சொந்தமான வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு உயர்அதிகாரிகளுக்கு விபத்து குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications