பூகம்பம் .. 2. 5மில்லியன் பவுண்டுகளில் கிராமம்
லண்டன்:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 2. 5 மில்லியன் பவுண்டுகளில் புதிய கிராமத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்துசெவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இங்கிலாந்தில் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என்ற பெயரில் நிதி வசூல்நடத்தப்பட்டது. வசூலான பணத்தை வைத்து குஜராத் மாநில மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பூகம்பத்தால் பெரும் அழிவைச் சேர்ந்த கட்ச் மாவட்டம் பூஜ் நகரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த புதிய கிராமம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
அகமதாபாத்திலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூஜ் நகரம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் புதிய கிராமம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. பூஜ்ஜில் வாழும் 7,000 மக்களின் நலனிற்காக இந்தப் புதிய கிராமம் உருவாக்கப்படவுள்ளது.
இந்தப் புதிய கிராமம் உருவாக்குவதற்காக வியாபாரிகள், சமுதாயத் தலைவர்கள், நிதி வசூல் அமைப்பாளர்கள் ஆகியோர் ஏற்கனவே 80,000பவுண்டுகள் நிதி வசூல் செய்து வைத்துள்ளனர்.
நிதி வசூல் செய்யும் பரூக் சுபேதார் கூறுகையில், குஜராத் பூகம்ப நிவாரண நிதி வசூல் நடத்தி வருகிறோம். நிவாரண நிதி நாளுக்குநாள் அதிகரிப்பது குஜராத்மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு உதவும். நீண்ட கால திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 2, 500 பவுண்டுகள்என்ற அளவில் 1,000 வீடுகள் கட்டிக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications