எதற்காக இந்த மோதல்?
சென்னை:
ஆரம்பமாகிவிட்டது சென்னையில் சாலஞ்சர் சீரிஸ் என்.கே.பி. சால்வே கிரிக்கெட் போட்டி. இந்தியா வரும்ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியை தேர்ந்தெடுக்க நடைபெறும் ஒரு சோதனை(வேதனை) போட்டி தொடர்தான் இந்த சாலஞ்சர் சீரிஸ்
இந்திய அணியில் விளையாடியவர்கள், விளையாட வாய்ப்பு தேடுபவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து அதைமூன்றாக பிரித்து இதில் யார் பலசாலி எனப் போட்டியிடுவதன் மூலம் தங்கள் பயிற்சியை ஆரம்பித்துஇருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
இவர்கள் எதிர்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலியா அணி எப்படி தெரியுமா? கடந்த மூன்று மாதமாக பல்வேறுநாடுகளை வென்று (கிரிக்கெட்டில் தாங்க!) முடிசூடா மன்னனாக உள்ளது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்,ஜிம்பாப்வே அணிகளை தன் நாட்டில் துவம்சம் செய்து விட்டு அடுத்த கோதாவிற்கு இந்திய (மண்ணை)மைதானத்தை நாடி வருகிறது.
வருவதற்கு முன்பே கர்ஜித்து கொண்டிருக்கிறார் ஸ்டீவ் வாஹ், பிட்சை மாற்றாதே என்பதில் ஆரம்பித்துஇந்தியாவிற்கு நெருக்குதல் அதிகம் என்பது வரை அவருடைய பேட்டிகள் தினமும் பத்திரிகைகளில்வந்தவண்ணமுள்ளன. நம்மூர் கேப்டன் என்ன சொல்கிறார் என்றால், வாஹ் சொல்வது பற்றி கவலையில்லை.போட்டியில் மோதி ஜெயித்தபின் யார் பலசாலி என்பதை அறிவோம் என்கிறார்.
இதனிடையே, இந்தியா நம்பியிருந்த அனில் கும்ப்ளே (பாகிஸ்தானுடான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டை வீழ்த்தியவர்) பாவம், இவர்களைஏமாற்றிவிட்டார். தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்ததால் அடுத்த மூன்று மாதங்களுக்கு விளையாடமாட்டார்.
இன்னொரு பக்கம் இவர்களுக்கு சந்தோஷம் என்னவெனில், அதிவேகப்பந்து வீச்சாளர் (பந்தை வீசுவாரா?எறிவாரா?) பிரட் லீ காயம் காரணமாக இந்தியா வரவில்லையாம். அவர் இல்லையென்றால் என்ன? டெண்டுல்கர்விக்கெட்டை அல்வா போல் சாப்பிட மெக்ராத் இல்லையா? அல்லது அகர்கரை தொடர்ந்து டக்கில் காஸ்பரோவிக்ஸ் இல்லையா?
இந்திய அணியையே அக்குவேறு ஆணி வேறாக பிரித்து, போக வேண்டியவர்கள், வரவேண்டியவர்களை சேர்த்துமூன்று அணிகளை திறமையாக(!) உருவாக்கி அவர்களுக்குள் விளையாடி பயிற்சி மேற்கொள்ளச் செய்கிறதுகிரிக்கெட் போர்டு. இதில், இன்னொருவர் கோர்ட் படியேறி பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இந்திய அணியில்இடம் பெறுவதற்கு ( அஜய் ஜடேஜா).
சாலஞ்சர் போட்டிகளால் என்ன லாபமிருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் போட்டியில் நன்றாக விளையாடியஅனைத்து வீரர்களும் இந்திய அணியில் இடம் பெற்றதில்லை. அதே சமயம், சிறப்பாக விளையாடாதவர்கள்அணியில் இடம் பெற்ற கதையும் உண்டு. பிறகு எதற்கு இந்தப் போட்டித் தொடர்?
உண்மையிலேயே நல்ல வீரர்களைத் தேர்வு செய்வதுதான் கிரிக்கெட் வாரியத்தின் நோக்கம் என்றால் நிச்சயம்இதுபோன்ற போட்டிகளிலிருந்து மட்டுமே வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கனவுகளுடன்வலம் வந்து கொண்டிருக்கும் இளம் வீரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications