சுப்ரீம் கோர்ட் செல்கிறது பாண்டி. த.மா.கா.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைஎதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
இதுகுறித்து, பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பாலன் நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்துமனோகர், ஏழுமலை மற்றும் ராஜசேகரன் ஆகியோரை கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மனோகர் பிரிவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவர்களைப் பதவிநீக்கம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார் மற்றும் கந்தசாமியின் சார்பில் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றுஇவ்வழக்கு குறித்து வாதாட உள்ளனர். இதுகுறித்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்வார்கள் என்றார்.
முன்னதாக, பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ஏழுமலை மற்றும் ராஜசேகர் ஆகியோர் கட்சியிலிருந்துபிரிந்தனர். அவர்கள், ஏற்கனவே எம்.எல்.ஏ. ஜெயக்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற த.மா.கா.எம்.எல்.ஏ. கண்ணனுடன் சேர்ந்தனர். மனோகர் தலைமையிலான கூட்டணி தாங்கள்தான் உண்மையான த.மா.கா. என்று கூறிக் கொண்டனர்.
இதையடுத்து பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகர் இவர்கள் மூவரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதைஎதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி.சுப்பிரமணியன், ஒரு கட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் என்பது தமிழ்நாடு,பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு என்று பாண்டிச்சேரி சட்டமன்ற சபாநாயகர் கொடுத்துள்ள விளக்கம்அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. அதனால் எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தது தவறு என்று உத்தரவிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications