பூகம்பம் .. துபாய் பள்ளி ரூ. 60 லட்சம் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஜனவரி 26 ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் துபாயிலுள்ளஇந்தியன் பள்ளியிலிருந்து ரூ 60.4 லட்சம் வசூல் செய்து பிரதமர் நிவாரண நிதித் திட்டத்திற்குகொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாயில் உள்ள இந்தியன் பள்ளி தலைவர் அசோக் முகர்ஜி கூறுகையில், எங்கள் பள்ளியில் 8, 600மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து வீடு வீடாகச் சென்று குஜராத் பூகம்ப நிவாரண நிதிவசூல் நடத்தினார்கள்.
மாணவர்களுடன் ஆசிரியர்களும், பெற்றோர்களும் உடன் சென்றனர். பிப்ரவரி 7-ம் தேதி நிதி வசூலீக்கத்தொடங்கினார்கள். ஒரு வாரத்திற்குள் 60.4 லட்சம் நிதியை வசூல் செய்துள்ளார்கள். இது எங்களை மிகவும்ஆச்சரியப்பட வைக்கிறது.
பள்ளி ஆசிரியர்களும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை குஜராத் நிவாரண நிதிக்காகக் கொடுத்துள்ளனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications