இலங்கையிலிருந்து 4 மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்கள் திங்கள்கிழமை விடுதலைசெய்யப்பட்டனர்.

இதுகுறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜனவரி 20 ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் படகு இலங்கை கடற்பகுதியில்சென்றதால் இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை விடுவிப்பதற்காக தமிழக அரசு முறையாக இலங்கை அரசிடம் வேண்டுகோள்விடுத்தது. இதையடுத்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது.

அவர்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். திங்கள்கிழமை பிற்பகல்அவர்கள் திருவனந்தபுரம் வந்தனர் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+