சமூக நல ஊழியர்களின் நூதன போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகதமிழ்நாடு சமூக நல காடுகள் கண்காணிப்பாளர்கள் சங்கம் தபால் அட்டை அனுப்பும்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அந்த சங்கத்தின் மாநில தலைவர் முருகனும்,தலைமையக செயலாளர் வேளாங்கண்ணியும் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்திருப்பதாவது:

காடுகள் கண்காணிப்பாளர்கள், வனப் பாதுகாவலர்களுக்கான காலியிடங்களைநிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

சமூக நல காடுகள் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் அந்த திட்டத்தின் கீழ்பணிபுரிந்தவர்களில் தகுதியானவர்களை வனத்துறையிலோ அல்லது வேறு அரசுதுறைகளிலோ இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிக்கும் அமர்த்தப்படவேண்டும்.

காடு கண்காணிப்பாளர்கள் மற்றும் சமூக நல காடுகளில் பணிபுரிபவர்களில் யார்,யார்எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற பட்டியலை அரசு தயாரித்துஅவர்களுக்கு மற்ற துறைகளில் நிரந்தர பணி அளிக்கப்பட வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+