பா.ம.க.வால் கூட்டணியில் குழப்பமில்லை .. ஜெ.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சேர்த்துள்ளதால், காங்கிரஸ்மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருப்பதற்குப் பிரச்சினையில்லை என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த பழனி நாடாளுமன்றஇடைத்தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோரியது. அதேபோல,புதுக்கோட்டை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆதரவை, பாட்டாளி மக்கள் கட்சி கோரியது.
இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு தேவை என்றுதான் பாட்டாளி மக்கள் கட்சி கோரி வருகிறது. தனித் தமிழ்நாடு கோரவில்லை. எனவே அக்கட்சியின் போக்கு பிரிவினைவாதப் போக்கு அல்ல.
பாண்டிச்சேரியில் பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எந்த முடிவையும் அதிமுக இதுவரைஎடுக்கவில்லை.
த.மா.கா.வும், காங்கிரஸும் இன்னும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்காததால், கூட்டணிக் கட்சிகளுடன்தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவது தாமதமாகி வருகிறது. இந்த வார இறுதிக்குள் இந்தப் பேச்சுவார்த்தைமுடிவடைந்தால் நலமாயிருக்கும்.
திமுக கூட்டணி இப்போது பலவீனமடைந்துள்ளது. எனவே தமிழ் மாநில காங்கிரஸை இழுக்க முதல்வர்கருணாநிதி பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்.
ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தமிழகத்தில் கொலை செய்ததற்குக் காரணம், கருணாநிதி அரசு போட்டுக்கொடுத்த பாதையே காரணம்.
வீரப்பனுக்கும், கருணாநிதிக்கும் இடையே ரகசிய உறவு இருக்கிறது. வீரப்பன் காட்டில் பிடிபட்ட டிஜிட்டல் டைரி,செல் போன்கள் போன்றவற்றை கேரள போலீஸ் பிடித்தது. அந்த போன் மற்றும் டைரியில், பலஅரசியல்வாதிகளின் ரகசிய எண்கள், கருணாநிதியின் தொலைபேசி எண்கள் இருந்தன.
கேரள முதல்வர் கூறியுள்ளபடி, தமிழக அரசு நினைத்தால் வீரப்பனை எளிதில் பிடித்திருக்க முடியும் என்பதே எனதுகருத்தும்.
தேர்தலில் வீரப்பன் பிரச்சினையை பெரிதாக்குவோம். தமிழ் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழர் மீட்புப் படைஆகியவை நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் அமைப்புகள். இவை வீரப்பனுடன் சேர்ந்துள்ளதுஅபாயகரமானது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications