புலிகளை அழிக்க இலங்கைக்கு 20 மில்லியன் டாலர்
கொழும்பு:
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதங்கள் வாங்க இலங்கை ராணுவத்திற்கு 20 மில்லியன் டாலர் கடனுதவிவழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி முகமது யூசுப் கான், உயர் அதிகாரிகள் குழுவுடன் இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்து இலங்கை ராணுவத் தளபதி கலோனல்பாலகாலேவைச் சந்தித்துப் பேசிய பின், இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கவும்,வெடிமருந்துகள் வாங்கவும் பாகிஸ்தான் 20 மில்லியன் டாலர்கள் கடனுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் இதுகுறித்து இறுதி முடிவுஎட்டப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்த போது இலங்கை ராணுவம்ஆயுதப் பற்றாக்குறையாலும், ராணுவ வீரர்கள் பற்றாக்குறையாலும் தவித்தது. அப்போது இந்தியா உள்பட வெளிநாடுகளின் உதவியை இலங்கைநாடியது. இருப்பினும், இந்தியாவிலிருந்து ராணுவ வீரர்களையோ, ஆயுதங்களையோ அனுப்புவதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இலங்கை ஆயுத உதவி கோரியது. அந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு உதவிசெய்ய மத்திய அரசு மறுத்து வந்தாலும் இறுதியில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக இந்தியா 100 மில்லியன் டாலர்கள்கடனுதவி அளித்தது.
அதற்குப்பின் ஆயுத பலத்தை வலுப்படுத்திக் கொண்ட இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளிடமிருந்து சில பகுதிகளை மீட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் பணஉதவி செய்வதாக அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications