"குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும்
திருச்சி:
குற்றச் செயல்களைக் குறைக்க வேண்டுமானால், போலீஸாருக்கும், பொதுமக்களுககும் இடையே நல்லுறவுநிலவுவது அவசியம் என தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறியுள்ளார்.
திருச்சியில் போலீஸ் உதவி சேவையை திங்கள்கிழமை துவக்கி வைத்து அவர் பேசுகையில், சமூகத்தில் குற்றச்செயல்கள் நடைபெறாவண்ணம் தவிர்க்க வேண்டுமானால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகளவில் மகளிர் காவல் நிலையங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போலீஸாருக்கு பெருமளவில் உதவ வேண்டும். இதன் மூலம் பெண்களக்குஎதிரான குற்றங்களைக் குறைக்க முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சேவை என்ற அமைப்பு எழுதியுள்ள ஒரு புத்தகத்தையும் ராஜகோபாலன் வெளியிட்டார்.
முன்னதாக, தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படைப் பிரிவு அலுவலக வளாகத்தில், போலீஸ் பயிற்சிக் கல்லூரியைராஜகோபாலன் திறந்து வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications