தலிபான்களின் அமெரிக்க தூதரகம் மூடப்படுமா?
நியூயார்க் :
தலிபன்களின் நியூயார்க் நகர அலுவலகத்தை மூடுவதற்கான அமெரிக்க உத்தரவை மறுபரிசீலனை செய்ய வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஐ.நா.தூதர்ஒருவர் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிற்கான ஐ.நா. சிறப்பு தூதரான பிரான்ஸே வேன்ரல் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும் போது, அமெரிக்காவின் தற்காலிகவெளியுறவுத்துறை செயலர் ஆலன் ஈஸ்தமுடன் செவ்வாயன்று பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
கடந்த வெள்ளியன்று தலிபன் அலுவலகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதையடுத்து தங்கள் நாட்டில் உள்ள ஐ.நா. அலுவலகங்களை மூட நேரிடும் என்றுதலிபன்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.
கடந்த டிசம்பரில் ஐ.நா. சபையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் கொண்டுவந்த தலிபன்கள் மீது தடை விதிக்கும் தீர்மானத்தை ஒட்டி ஏற்கனவே ஒரு முறைதலிபன்கள் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக்குப்பின் நிருபர்களை சந்தித்த ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் நான்சி சோடர்பெர்க், தலிபன்கள் தங்கள்நியூயார்க் நகர அலுவலகத்தை கட்டாயம் மூட வேண்டும். எனினும் ஐ.நா.வுடன் தலிபன்கள் நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவில் அந்நாடு எடுக்க வேண்டியமுடிவு பற்றி தெரியவரும். தலிபன் அலுவலகத்தில் இருக்கும் நபர்களை பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும்.
தலிபன்களின் நியூயார்க் அலுவலகம் ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றதல்ல. எனவே, அங்கு நடைபெறும் பணிகள் அனைத்தையும் அவர்கள் மாற்றத்தான்வேண்டும். இவ்விஷயத்தில் கடுமையாக நடக்க வேண்டியிருக்கிறது.
தலிபன்களை ஐ.நா. மட்டுமின்றி பல நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. தலிபன்களிடம் ஆட்சியை பறிகொடுத்து விட்டு ஆப்கனின் வடக்கில் ஒரு சிறுபகுதியைஆளும் அரசாங்கத்தைதான் ஐ.நா. இன்னமும் அங்கீகரிக்கப்பட்ட அரசாக கருதுகிறது.
தலிபன்களுடன் ஐ.நா.சபை தொடர்பு வைத்திருப்பது ஆப்கனில் நடைபெறும் ஐ.நா.வின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும், பழைய அரசை மீண்டும்ஆட்சியில் அமர்த்துவது குறித்த அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளுக்காக மட்டுமே. அந்த தொடர்பும், டிசம்பரில் ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்டதீர்மானத்தின் மூலம் தொடர்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றார்.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை ஒப்படைப்பதற்காக தலிபன் அரசு மீது, ஆயுதம் மற்றும் விமான போக்குவரத்து தடை விதிக்க ஐ.நா.தீர்மானம் கோருகிறது.
வேன்ரல் மேலும் கூறுகையில், கோடைகாலத்திற்குள் எஞ்சியுள்ள வட மாகாண பகுதிகளை பிடிக்க தலிபன்கள் திட்டமிட்டுள்ள போதும், தற்போதுவிதிக்கப்பட்டுள்ள தடையால் அத்திட்டத்தின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.
தலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கனில் நடைபெறும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் பொறுப்பை ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்தன்னிடம் ஒப்படைத்துள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலின் முடிவுகள் பெரும்பாலும் சர்வதேச சமுதாயத்தின் கருத்தை பிரதிபலிப்பதாகவே அமையும் என்பதை தலிபன்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
பாதுகாப்பு கவுன்சிலின் தடையால் தலிபன்கள் தன்னை மத்தியஸ்தராக கருதவில்லை. இருந்தபோதும் இவ்விஷயத்தை முடிவுக்கு கொண்டுவரஐ.நா.பொதுச்செயலாளர் கோபி அன்னான் தன் பங்கிற்கு செயல்படுவார் என்று தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications