யோசித்து முடிவெடுங்கள் .. ப.சிதம்பரம் அறிவுரை
சென்னை:
எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தாலும் அல்லது மூன்றாவது அணிஅமைப்பதாக இருந்தாலும் கட்சியின் குறிக்கோளையும், கொள்கையையும் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், த.மா.கா.தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
சிதம்பரத்தின் இந்த கருத்து சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார் தலைமையில் நடந்தத.மா.கா. தேர்தல் கூட்டணி கூட்டம் முடிந்த பின் தெரிவிக்கப்பட்டுள்ளதுமுக்கியத்துவம் பெறுகிறது.
.சிதம்பரம் தன் கருத்தை கையால் எழுதிய கடிதத்தின் மூலம் மூப்பனாருக்குஅனுப்பியுள்ளார். சிதம்பரம் சில காலமாக கட்சியின் முக்கியமான கூட்டங்களில் கூடகலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். தற்போது தேர்தல் நெருங்குகிறவேளையில்,முக்கிய கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
த.மா.கா.வுககு முன்னால் மூன்று வாய்ப்புகள் உள்ளன. அ.இ.அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் சேரலாம், அல்லது தி.மு.க. தவைமையிலானகூட்டணியில் சேரலாம். அல்லது மூன்றாவது அணி அமைக்கலாம். ஆனால் இதில்எதை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து எந்த கருத்தும் நான் கூற விரும்பவில்லை.
ஆனால் எந்த முடிவு எடுத்தாலும், கட்சியின் குறிக்கோள், கொள்கையை கருத்தில்கொண்டு எடுக்கப்பட வேண்டும். இந்த கருத்துக்களை நான் தலைவர் மூப்பனாரிடம்வலியுறுத்தி கூறியுள்ளேன் என கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் மூப்பனார் எந்த முடிவெடுப்பதானாலும் விரைந்துமுடிவெடுக்க வேண்டும். அப்போது தான் தொண்டர்களை அதற்கேற்றாற் போல்செயல்பட வைக்க முடியும் என வலியுறுத்தி கூறியிருந்தார் சிதம்பரம். ஆனால் இந்தகருத்து மூப்பனாரால் கவனிக்கப்படவில்லை.
சிதம்பரம் உள்ளிட்ட த.மா.கா.வினர் சிலர் அ.தி.மு.கவுடனான தேர்தல் கூட்டணியைஎதிர்த்து வருவதாக கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது.
1996-ம் ஆண்டுஅ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்துதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications