எல் சால்வடேரில் பூகம்பம் .. 127 பேர் பலி
சான் சால்வேடர் (அமெரிக்கா):
எல் சால்வடேர் நாட்டின் தலைநகர் சான் சால்வேடரில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட பூகம்பத்தில் 127 பேர் உயிரிழந்தனர். 1,200 பேர்படுகாயமடைந்தனர்.
தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதி நாடான எல் சால்வடேர் தலைநகர் சான் சால்வேடரில் ஒரு மாதத்திற்கு முன்பு 6.2 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டநிலநடுக்கத்தில் 844 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சான் சால்வேடர் மாநிலத்தில் உள்ள லா பாஸ், கஸ்கட்லான் மற்றும் சான் விஸைன்ட் ஆகிய 3 மாவட்டங்களில்உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருட்டுகளை தடுக்க இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ...: இந்தோனேசியாவின் தென் கடற்கரை பகுதிகளில் செவ்வாயன்று லேசான பூகம்பம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு சுமத்ராதீவுகளில் அமைந்துள்ள நகரங்களை பாதித்ததாக ஆஸ்திரேலிய பூகோளவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.
செவ்வாயன்று பகல் 12-58 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஜகர்தாவிலிருந்து 400கி.மீக்கு மேற்கே கடலில் மையம் கொண்டிருந்தது. இப்பகுதிகளில்நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. சில நேரங்களில் அதன் பாதிப்பு அதிகளவில் இருக்கும்.
இந்தியாவில் ...: இந்தியாவின் கேரள மாநிலத்திலும் செவ்வாய்க்கிழமை இரவு லேசான பூகம்பம் இருந்தது. கோட்டயம் மற்றும் கொல்லம்மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
செவ்வாயன்று காலை 7 மணி முதல் 10 மணி வரையான நேரத்தில் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளிலிருந்த பாத்திரங்கள்உருண்டதோடு பல வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
கோட்டயம் பகுதியில் அதிகாலை 2-30 மணியளவிலும், பின் காலை 8-15 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications