பூச்சி மருந்து குடித்து 2 சிறுமிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாவட்டம் வையாலன் மேடு கிராமத்தில் வசித்து வந்த அக்காவும், தங்கையும் பால் என்று நினைத்துப் பூச்சி மருந்தைக் குடித்ததால்உயிரிழந்தனர்.

இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், வையாலன் மேடு கிராமத்தில் வசித்து வருபவர் ராஜூ. விவசாயியான இவர் தனது வயலுக்குப் போடுவதற்காகபூச்சி மருந்து வாங்கியிருந்தார்.

வெள்ளை நிறத் திரவமான அந்த மருந்து பாட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. அது பால் என்று நினைத்து இவரது குழந்தைகள் மேனகா (5), யோகேஸ்வரி(2) ஆகிய இருவரும் குடித்து விட்டனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் தலைசுற்றி விழுந்தனர். பயந்த போன அவர்களது தாய் தமிழரசியும் (30) அந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்தார்.

மூன்று பேரும் உயிருக்குப் போராடிய நிலையில் கே.ஏ.பி. விஸ்வநாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.தமிழரசியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+