கட்ச்சில் மீண்டும் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் தொடர்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு 6 முறை நிலநடுக்கம்ஏற்பட்டது.
இந்திய பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை இதுகுறித்துக் கூறியதாவது:
கட்ச் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 5.01 மணிக்கு 3.0 மற்றும் 3.6 என்ற ரிக்டர்அளவுகள் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்ச் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று ஏற்பட்டபூகம்பத்துக்குப்பின் இதுவரை 314 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, புதன்கிழமை காலை 9.26 மணிக்கு 3.3. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்றுதெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications