இவான் லென்டிலுக்கு புதிய கெளரவம்
புளோரிடா:
முன்னாள் டென்னிஸ் வீரர் இவான் லென்டில், சர்வதேச டென்னிஸின் புகழ்மிக்கோர் அரங்க உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டென்னிஸ் உலகில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அரங்கம்.இவ்வரங்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொருவர் ஆஸ்திரேலியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வீரர்மெர்வின் ரோஸ்.
தொடர்ந்து 270 வாரங்கள் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரராக திகழ்ந்த லென்டில் பெற்ற 94 பட்டங்களில்இடம் பெறாதது விம்பிள்டன் பட்டம் மட்டுமே.
தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த லென்டில் இது தனக்களிக்கப்பட்ட, ஒவ்வொரு டென்னிஸ்வீரரும் அடைய விரும்புகின்ற கெளரவமாகும் என்றார். அதற்கான விழாவில் பங்கு பெற ஆர்வமுடன் உள்ளதாககூறும் முன்னாள் செக்கோஸ்லோவேகியா வீரரான லென்டில் தற்போது அமெரிக்காவில் குடியிருந்து வருகிறார்.
புகழ்பெற்ற வீரர்கள் பலர் ஏதாவதொரு பட்டத்தை வெல்லாமல் இருப்பது சகஜமான ஒன்று. ஜான்மெக்கன்ரோவிற்கு கிடைக்காதது பிரெஞ்ச் ஓபன் பட்டம் (மெக்கன்ரோவின் கடைசி பிரெஞ்ச் ஓபன் பட்ட கனவைதகர்த்தவர் லென்டில்), லென்டிலுக்கு விம்பிள்டன் பட்டம் , தற்போதைய பீட் சாம்ப்ராஸிற்கு இதுவரைகிடைக்காதது பிரெஞ்ச் ஓபன் பட்டம்.
ஆஸ்திரேலியாவின் மெர்வின் ரோஸ் 50களில் ஆஸ்திரேலியாவிற்கு டேவிஸ் கோப்பையை பெற்றுத் தந்தவர்.அவர் 90 களில் சர்வதேச அரங்கில் மீண்டும் அதிகம் அறியப்பட்டதற்கு காரணம் அவருடைய சிஷ்ய கோடிஸ்பெயினின் அரன்ட்ஸா சான்ஸெஸ் விகாரியோ. ரோஸின் பயிற்சியில் விகாரியோ 90களில் பட்டங்கள் பலவென்றார்.
ஜூலை 14ல் நியூ போர்ட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் லென்டிலும், ரோஸும் சர்வதேச டென்னிஸ் புகழ்மிக்கோர்அரங்கில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications