மாஜிஸ்திரேட் மீது செருப்பு வீசிய கைதி
சேலம்:
சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி மீது ஒரு விசாரணைக் கைதி செருப்பை வீசினார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில்பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், கரசோதிப்பட்டி அருகே உள்ள பெருமாள் மலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் மீது பைக்திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக மணிகண்டனைப் போலீசார் கைதுசெய்தனர். பின்னர் இவர் தொடர்ந்து சிறையில் இருந்தார். மேலும் இவருக்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகள்சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தது.
இரண்டு சக்கர வாகன திருட்டு வழக்கில் இவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். விசாரணை நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென மாஜிஸ்திரேட் மீது மணிகண்டன் செருப்பை வீசினார்.
அதிர்ஷ்டவசமாக செருப்பு மாஜிஸ்திரேட் குப்புசாமி மீது படாமல் மேஜை மீது விழுந்தது. இதையடுத்து அந்தநீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பரபரப்பைப் பயன்படுத்தித் தப்பி ஓட மணிகண்டன் முயன்றார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.
இது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மாஜிஸ்திரேட் குப்புசாமி, முன்பு ஒரு வழக்கில், மணிகண்டனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைஅளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் செருப்பை வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications