இந்தி நடிகர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் இந்தி திரைப்பட நடிகர் தினேஷ் ஆனந்த் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
தினேஷ் ஆனந்தின் உடலை வியாழக்கிழமை இரவு சஞ்சய் காந்தி பூங்காவிலிருந்து போலீஸார் கண்டெடுத்தனர்.
தினேஷ் சமீபத்தில் வெளியான குச் காபி குச் மை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் இருந்தது.பூங்காவிற்கு வெளியே அவரது புதிய கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அவர் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இப்படுகொலைச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications