கடலில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

Subscribe to Oneindia Tamil

ஜகர்தா:

இந்தோனேஷியாவில் 12 வெளி நாட்டினருடன் காணாமல் போன சுற்றுலா படகை அந்நாட்டின் கடற்படை மீட்பு படகுகள் தேடி வருகின்றன. விமானம்மூலமும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தீவுகளான பாலி மற்றும் லாம்போக் இடையே புதனன்று இரவு காணாமல் போன இப்படகில் 10 பிரிட்டிஷ்பயணிகளும், ஆஸ்திரேலிய மற்றும் நார்வேயின் பயணிகள் ஒருவரும் இருந்துள்ளனர். இப்படகு கடல் கொந்தளிப்பில் மாட்டியுள்ளதாக அதிலிருந்து தப்பிய பயணிஒருவர் மொபைல் மூலம் ஆஸ்திரேலியாவின் மீட்பு படைக்கு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மீட்புப்படை இந்தோனேஷியப் படைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து தேடுதல் பணி மேற் கொள்ளப்பட்டிருப்பதாக இந்தோனேஷியாவின்தேசிய தேடுதல் மற்றும் மீட்பு பணி அமைப்பான சுதர்சோ தெரிவித்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+