குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க பாண்டி. அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் அகற்றுவதற்காக மாநில அளவில் தொழில் துறைசெயலாளரை தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைக்க பாண்டிச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குழுவில் 6 அரசு உறுப்பினர்களும் அரசு துறை சாராத உறுப்பினர்கள் 5 பேரும் இடம் பெறுவார்கள்.
இது பற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த குழு வேலை செய்யும் குழந்தைகளின் நிலை, குறிந்துஆராயும். அவர்கள் முன்னேற்றத்திறக்கான வழி முறைகள்,திட்டங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யும்.மேலும் இந்த திட்டங்களை எவ்வாறு சிறந்த முறையில் நிறைவேற்றுவது என்பது குறித்தும் அரசுக்கு தெரிவிக்கும்என கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications