காங். பொதுச் செயலர் மீது வழக்கு
கோவை:
தமிழக காங்கிரஸ் பொதுச் செயலர் மீது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை, மாநகராட்சிக் கவுன்சிலரும்., தமிழக காங்கிரஸ் பொதுச் செயலராகவும் இருப்பவர் ஹேமா ஜெயசீலன். கடந்த ஜனவரி 31 ம் தேதி நடந்தகோவை மாகநராட்சிக் கூட்டத்தில் ஹேமாஜெயசீலன், கவுன்சிலர்கள் மீது புகார் தெரிவித்தார்.
அதோடு மேயர் மீதும் தீண்டாமைப் புகார் தெரிவித்தார். இதையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமிக்கும், ஹேமா ஜெயசீலனுக்கும் இடையேகடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் அவைக்குள்ளேயே கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது லட்சுமி புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஹேமா ஜெயசீலன் தன்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகத்தெரிவித்துள்ளார். இதையடுத்து ஹேமா ஜெயசீலன் மீது தீண்டமைச் சட்டம் மற்றும் வன்கொடுமைச் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications