மனைவியை துன்புறுத்தியவருக்கு 18 மாத சிறை
Subscribe to Oneindia Tamil
கோவை:
மனைவியைக் கொடுமைப் படுத்திய வழக்கில், கணவனுக்கு 18 மாத கால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவையில் சிவில் இன்ஜினியராகப் பணியாற்றி வருபவர் ராமலிங்கம். இவருக்கும் சிங்காநல்லூரைச் சேர்ந்த சித்ரா தேவி என்பவருக்கும் கடந்த 94 ம்ஆண்டு திருமணம் நடந்தது.
இருவருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக அடிக்கடி சண்டை வந்தது. இதில், ராமலிங்கம், சித்ரா தேவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த சித்ராதேவி, கணவனின் துன்புறுத்தல் தொடர்பாக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து ராமலிங்கத்தைக் கைதுசெய்தனர்.
இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட் செங்கோடன் விசாரணை செய்தார். இந்த வழக்கில் ராமலிங்கத்திற்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து அவர்தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications