ஸ்ரீநகரில் துப்பாக்கிச் சூடு .. 4 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர்காயமடைந்தனர்.

இதையடுத்து ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகரில் கடையில் வேலை செய்து வந்த ஜலீல் அஹமது ஷா என்பவரை போலீஸார் விசாரணைக்காகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையேவியாழக்கிழமை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார்.

இதையடுத்து 1,000 க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள், ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பெருங்கூட்டம் கூடிவிட்டது. இதையடுத்து போலீஸார் கூட்டத்தினரை கலைப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 18 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாகப் பொது மக்கள் கூறுகையில், ஷா ஒன்றும்அறியாதவர். அவரைத் தீவிரவாதி என்று நினைத்துப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் சிறையில் இருக்கும் போது உயிரிழந்தார். போலீஸார் அவரை ஜம்மு - காஷ்மீர் விடுதலைப் படை தீவிரவாதி என்று நினைத்துக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்திற்கு போலீஸார் பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+