சபாநாயகர் துரோகி .. அழகிரி
மதுரை:
தி.மு.க.வும், த.மா.கா.வும் இணைய வேண்டும் என்று திருத்துறைப்பூண்டியில் பேசிய சபாநாயகர் பழனிவேல் ராஜனின் பேச்சு ஒரு நாடகம். அவருக்கு சரியானபாடத்தை தொண்டர்கள் புகட்ட வேண்டும் என்று முதல்வரின் மதுரை மகன் மு.க. அழகிரி கூறியுள்ளார்.
சபாநாயகர் பழனிவேல் ராஜனை வெளிப்படையாக எதிர்க்க முடிவு செய்துள்ள அழகிரி, மதுரையில் விழா ஒன்றில் பேசுகையில், மதுரை வந்த முதல்வரைவரவேற்க சென்ற பொன். முத்துராமலிங்கம் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு காரணம் யாரென்பது அனைவருக்கும் தெரியும். அழகிரி இருந்திருந்தால் அவ்வாறு நடந்திருக்காது. தொண்டர்களுக்காகப்பாடுபடுபவர்களுக்குத்தான் என்றும் மரியாதை.
எனவே, தி.மு.க.வும், த.மா.கா.வும் இணைய வேண்டும் என்று நாடகம் நடத்தும் சபாநாயகர் போன்ற துரோகிகளுக்கு தொண்டர்கள் பாடம் புகட்டவேண்டும் என்று கூறினார். அழகிரியின் இந்த பேச்சு தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications