விமான தயாரிப்பு .. ரஷ்யாவுடன் கைகோர்க்கிறது இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 2 சிறிய பயணிகள் விமானத்தை இந்தியாவில் தயாரிக்கக் கூடிய ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும்வியாழக்கிழமை கையெழுத்திட்டன.

ரஷ்ய துணைப் பிரதமர் இலோய் கிளிபவ் டெல்லி வந்துள்ளார். அவரும், மத்திய வான்வழிப் போக்குவரத்து அமைச்சர் சரத் யாதவும் விமானத்துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது, இந்தியாவில் 16 பயணிகள் செல்லும் வகையில் சிறிய விமானம் ஒன்றைத் தாயரிக்கவும், 100 பயணிகள் செல்லும் வகையில் நடுத்தரவிமானம் ஒன்றைத் தயாரிக்கவும் ரஷ்யா உதவி செய்வதாகக் கூறியது. இதற்கான ஒப்பந்தங்களில் சரத் யாதவும், இலோய்யும் தலைநகர் டெல்லியில்கையெழுத்திட்டனர்.

முன்னதாக, உலகத் தரம் வாய்ந்த சுகோய் 30 ரக போர் விமானங்களைத் தயாரிக்க ரஷ்யா அனைத்துத் தொழில்நுட்ப உதவிகளையும் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+