25 கிலோ கஞ்சா தூள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ரூ 2.50 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா தூளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
செவ்வாய்க்கிழமை போதை பொருள் தடுப்பு போலீசார் வேலூர் மாவட்டம் புலியூர் - புதுர்நாடு என்ற இடத்திற்கு இடையே 25 கிலோ கஞ்சா தூளைபறிமுதல் செய்தனர் உலக சந்தையில் இதன் மதிப்பு ரூ 2.50 லட்சமாகும்.
இந்த சம்வபத்தில் தொடர்புடைய வேலூர் மாவட்டம், மேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் (30), பெருமாள் (40), கோபால்சாமி (53). குப்புசாமி (20) ஆகிய4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4 நாட்டு துப்பாக்கிகளும் கைப் பற்றப்பட்டன. இவர்கள் நால்வரும் நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications