எஸ்.சி., எஸ்.டி.இடஒதுக்கீடு .. விசாரிக்க குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிற்படுத்த வகுப்பினர், ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. காலியிடங்களை நிரப்ப அரசு ஆணை 44பின்பற்றப்பட வேண்டுமா அல்லது அரசு ஆணை 33 பின்பற்றப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க குழு ஒன்றை தமிழக அரசுநியமித்துள்ளது.

இதன் மூலம் எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்துள்ளது என கூறலாம்.இந்தகுழுவுக்கு ஒய்வு பெற்ற முன்னாள் சென்னை உயர் நீதிமன்றநீதிபதி சுவாமி துறை தலைவராக இருப்பார். இவர் தனது அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என அரசுசெய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்துறை சீரமைப்பு செயலாளர் இந்த குழுவின் அமைப்பாளராக இருப்பார். சட்டத் துறை செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்தறை உறுப்பினர்கள் இந்த குழுவில் அங்கம் வகிப்பார்கள்.

தமிழக அரசு அரசு ஆணை 33-ஐ அரசு ஆணை 44-ன் மூலம் மாற்றியமைத்தது. இது எதிர்கட்சிகளின் பலத்த கண்டனத்திற்குள்ளானது.ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இடையே கடும் சண்டை உருவானது. ஜெயலலிதா கருணாநிதி செய்தது தவறு என கூற, கருணாநிதி தான் செய்தது சரி எனகூறினார்

ஜெயலலலிதா கருணாநிதி அரசு பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை பறிக்கிறது என குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்சனை சட்டசபை கூட்டங்களை நடக்கவிடாமல் தடை செய்தது. சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி எதிர்கட்சிகள் அரசு ஆணை 44நன்மை பயக்கும் என நினைத்தால் அரசு தனது முடிவு அதை மறுபரிசீலனை செய்ய தயாராக இருக்கிறது என கூறியிருந்தார்.

அதன் படி அரசு வியாழக்கிழமை முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில் எந்த அரசு ஆணையை பின்பற்றுவது என்பது குறித்துஆராய குழு ஒன்றை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு குழு அமைக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+