உயிரைப் பறித்த கோவா சுற்றுலா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை இன்ஜினியரிங் மாணவர்கள் இருவர் கோவாவில் கடல் அலையில் சிக்கி பலியாயினர்.
கோவாவிற்கு சுற்றுலா சென்ற மதுரை இன்ஜினியரிங் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் ஞாயிறன்று கடலை சுற்றி பார்க்கச்சென்றுள்ளனர். அப்போது ராட்சத அலை ஒன்றில் சிக்கிய ஜோனதன் என்ற ஜோனி(18), மற்றும் சுப்புராஜ்(18) இருவரும் பாறையில்மோதியதில் மரணமடைந்துள்ளனர்.
கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் நெடுநேரம் திரும்பாததால், கோவா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் சென்று தேடியதில் மறுநாள் இருவருடைய சடலஙகளும் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ராஜப்பாவிற்கு ஜோனி ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்புராஜின்தந்தை ராஜூ மதுரை கனரா வங்கி அதிகாரியாவார்.












Click it and Unblock the Notifications