பிரதமர் பாதுகாப்புக்கு குண்டு துளைக்காத கார்
கோவை:
கோவையில் பிரதமர் வாஜ்பாய் வருகையையொட்டி அவரது பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத 5 கார்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவைடெல்லியிருந்து விமானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவைக்கு பிரதமர் வாஜ்பாய் பிப்ரவரி 16 ம் தேதி வருகிறார். இதைத் தொடர்ந்து நகர் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நகர் முழுவதும் ஆயுதப் படையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும்,பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பதிலும் கூட, பாதுகாப்பு கருதி கடுமையான விதிமுறைகளை போலீசார்மேற்கொண்டுள்ளனர்.
கோவை நகருக்குள் வருகை தரவிருக்கும் பிரதமரின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத கார்கள் கோவைக்குவந்து சேர்ந்தன. இதில் விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் எந்த வெடி பொருட்களையும், ரிமோட்களையும் இந்த காரில் உள்ளசக்தி வாய்ந்த ராடர் சாதனம் செயலிழக்கச் செய்து விடும்.












Click it and Unblock the Notifications