பூகம்பம் ... மாநில அரசு ரூ 20 கோடி நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக தமிழ்நாடு அரசு திரட்டும் நிதி 20 கோடியை தாண்டியது. குஜராத்திரி என்னும் நிகழ்ச்சி மூலம் ராஜ் டி.வி. திரட்டிய 25லட்சம் ரூபாய் நிதியை புதனன்று இரவு தமிழக முதல்வரிடம் அளித்தது.
சீரணி அரங்கில் புதனன்று நடைபெற்ற குஜராத்திரி கலைவிழா நிகழ்ச்சிக்கு பின் ராஜ் டி.வி மற்றும் பல தனியார் நிறுவனங்கள் அளித்த நிதியை பெற்றுக்கொண்ட பின் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, நாட்டில் எங்கு பேரழிவு ஏற்பட்டாலும் அதனைக் களைவதற்கு தமிழகம் முன்னிலையில் நிற்கும் என்பதைஇந்நிகழ்ச்சி உணர்த்துவதாக கூறினார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் மக்கள் நிதி அளிப்பதற்காக பிரம்மாண்டமான உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி மேடையில் குஜராத்தின் பூகம்பபாதிப்புகளை வண்ணக் கலவையில் வடித்து வைத்திருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications