புதிய விளையாட்டுக் கொள்கை அறிமுகம் .. அமைச்சர் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
புதிய விளையாட்டுக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான மத்தியஅமைச்சரவையின் ஆலோசனைப்படி கமிட்டிக் கூட்டத்தில் உமா பாரதி மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
புதிய விளையாட்டுக் கொள்கை இறுதி வடிவம் பெற்று வருகிறது. விளையாட்டுத் துறையில் நாடு சிறப்பானஇடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய கொள்கை உருவாகியுள்ளது.
பொதுப் பட்டியலில் விளையாட்டைக் கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதம் நடந்து வருகிறது. சிட்னிஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கங்களை வெல்லாததால் அதன் செயல்பாடுகள் மோசம் என்று சொல்ல முடியாதுஎன்றும் கூறினார் உமா பாரதி.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications