காட்டெருமை தாக்கி அதிரடிப்படை வீரர்கள் காயம்
கோவை:
காட்டெருமை தாக்கி இரண்டு அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்தனர். இவர்கள் தற்போது சத்தியமங்கலம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தேடுதல் வேட்டையின்போது காடுகளில் மிருகங்களுக்குப் பயந்து இப் பணியை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் கஜவெட்டி என்ற இடத்தில் அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். கர்நாடக அதிரடிப்படை சப்இன்ஸ்பெக்டர் மொன்னப்பா (56) என்பவரின் தலைமையில் ஈடுபட்ட இந்த குழுவினரை காட்டெருமைக் கூட்டம்ஒன்று விரட்டிச் சென்றது. இதில் இவர்கள் உயிர்தப்ப ஓடினர்.
இதில் காட்டெருமை தாக்கியதில் மொன்னப்பா மற்றும் டிக்கேசாமி என்ற இருவரும் காயமடைந்தனர். இவர்கள்இருவரும் சத்தியமங்கல அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications