த.மா.கா.கூட்டணி குழப்பம் .. முதல்வர் கிண்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேச வேண்டிய நேரமல்ல செயல்பட வேண்டிய நேரம் இது என்று த.மா.கா. எம்.எல்.ஏ. கூற வேண்டிய இடம் இத்திருமண விழா அல்ல வேறு இடம்என்று தி.மு.க. தலைவர் த.மா.கா.வின் கூட்டணி குழப்பத்தை கேலி செய்துள்ளார்.
சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ.காந்தியின் இல்லத் திருமண விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகையில், எம்.எல்.ஏ. காந்தி, தொகுதிக்குஆற்றும் பணிகள் பாராட்டிற்குரியது. தி.மு.கவின் வெற்றிக்கு பாடுபடும் எம்.எல்.ஏக்களுக்கு தேர்தலில் கட்சியின் சீட் உண்டு.
மணமக்களை பலர் வாழ்த்தி பேசியனார்கள். ஆனால், த.மா.கா. எம்.எல்.ஏ. ஞானசேகரன் மட்டும் இது பேசுவதற்கு பதில் செயல்பட வேண்டியநேரம் என்று கூறியுள்ளார். இதை மணமக்களுக்கு சொன்னாலும், அவை சொல்ல வேண்டிய இடம் பல நாட்களாக முடிவெடுக்காமல் பேசிக்கொண்டேயிருக்கிற இடமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications