சென்னையில் இளைஞர் வழிகாட்டி அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

படித்து முடித்த பின் தேர்ந்தெடுத்து பணிபுரிய வேண்டிய துறைகள், மேல்படிப்பிற்கான வழிகாட்டு முறைகள் பற்றி இளைஞர்களுக்கும், குழந்தைகளைவழிநடத்தும் பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வழிகாட்டும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சார்பில் இந்த அரங்குகள் வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழக முதல்வரின் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலருமான அஷோக் வரதன் ஷெட்டிகூறியதாவது:

வழிகாட்டி அரங்கில் நடைபெறும் கண்காட்சியில் பல்வேறு துறைகளுக்கான புத்தகங்களும் கிடைக்கும். வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமின்றிமேல்படிப்பிற்கு வழிகாட்டும் வகையிலும் கண்காட்சி அமைந்திருக்கும்.

இந் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், குடியுரிமைப் பணிகளின் தேவையும், முக்கியத்துவமும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கும்,தொழில்கல்வி படிப்பு மற்றும் பணி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு ஒன்றும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கு 80 கல்லூரிகள் மற்றும 400 பள்ளிகளின் மாணவர்கள் உள்பட 3 லட்சம் பேர் வரை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கி தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் முதல்வரின் கூடுதல் செயலாளர் வெ. இறையன்பு உரை நிகழ்த்த உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+