இன்று தி.மு.க.பொதுக்குழு கூடுகிறது
சென்னை:
சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
பொதுக்குழுக் கூட்டத்தில் வரும் சட்டசபைத் தேர்தல், கூட்டணி முடிவுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமகவிலகி அ.தி.மு.க வுடன் இணைந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடாத நிலையிலும் கூட அ.தி.மு.க சார்பில் வேட்புமனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுமுடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தி.மு.க பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடுகிறது. முதல்வர் கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமைவகிக்கிறார்.
பொதுக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்காக மூப்பனார் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க தொண்டர்களுக்கும், அமைச்சர்களுக்கும்இடையே பல கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொண்டர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு எதிராகப் புகார்கள் கூறத் தயாராகஇருப்பதாகவும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை கூடும் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications