காஷ்மீர் பிரச்சனை தீருமா?
துபாய்:
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வாஜ்பாய் தவிர வேறு எந்த இந்தியத் தலைவராலும் முடியாது. அதனால் வாஜ்பாய்முயற்சி செய்து காஷ்மீர் பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாகிஸ்தான்முன்னாள் பிரதமர் அப்துல் கயாம் ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் அப்துல் கயாம் கூறுகையில், காஷ்மீரில் பல்லாண்டு காலமாகசண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையைத் தீர்த்து வைக்க இந்திய பிரதமர் வாஜ்பாயால் மட்டுமே முடியும்.அதாவது வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருக்கும் போதே காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் மிகவும் ஆர்வமுடையவர் வாஜ்பாய். அதனால்தான் அவர் ரம்ஜான்மாதத்தின் போது காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார். அதே போல் அதை அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டித்தார். சண்டை நிறுத்தம் காஷ்மீர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும் இந்நாளில் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை குறைந்ததோடு மட்டுமல்லாமல்,தீவிரவாதிகளின் தாக்குதலும் குறைந்திருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானும் முடிந்த அளவு தாக்குதலைக்குறைத்துள்ளது. ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்கள் பாகிஸ்தான் வந்து காஷ்மீர் பிரச்சனை உள்பட பலபிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதி அமைப்பின் தலைவர் சையத் சலாவூதின் கூட வாஜ்பாயின் சண்டை நிறுத்தமுயற்சியைப் பாராட்டியிருக்கிறார். இதனால் கண்டிப்பாக தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் இந்தியப்பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் அப்துல் கயாம்.
ஐ.ஏ.என்.எஸ்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications