டைசன் - லூயிஸ் போட்டி தேதி முடிவாகவில்லை
Subscribe to Oneindia Tamil
லண்டன்: மைக் டைசன் - லூயிஸ் இடையே ஜூலை 21ம் தேதி போட்டி நடைபெறும் என்ற செய்தி தவறானது என்று லூயிஸின் மேலாளர் பானோ எலியாட்ஸ்தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ். காம் வெப்சைட்டிற்கு அளித்த பேட்டியில் இருவருக்குமிடையே போட்டி நடைபெறுவது உறுதியாகும் பட்சத்தில் அப்போட்டி அக்டோபர்மாதத்திற்கு பின் தான் நடைபெறும். ஜூலை-ஆகஸ்ட் மாத காலங்கள் தொலைக்காட்சிகளில் இம்மாதிரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உகந்ததல்ல.

மேலும், லூயிஸ் ஒப்பந்தமாகியுள்ள ஹோம் பாக்ஸ் ஆபிஸ் (ஹெச்.பி.ஓ) டி.வி.யும், டைசன் ஒப்பந்தமாகியுள்ள ஷோ டைம் டி.வி.யும் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஜூலை 21ம் தேதி போட்டியை நடத்துவது என்பது இயலாத காரியம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications