தி.மு.க.வுடன் இணைகிறது புதிய தமிழகம்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும் என்று புதிய தமிழகம்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், தமிழக முதல்வர் கருணாநிதியும் சந்தித்துப் பேசினர்.
பின்னர் இருவரும் நிருபர்களுக்குக் கூட்டாக அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தி.மு.க வுடன் இணைந்துபுதிய தமிழகம் தேர்தலில் போட்டியிடும்.
புதிய நீதிக்கட்சி மற்றும் பிற கட்சிகள் சிலவும் தமிழகத்தில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
புதன்கிழமை இரவு கோவை மாவட்டத்தையடுத்துள்ள வெள்ளியங்கிரி காட்டுப் பகுதியில் வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறன் கைதுசெய்யப்பட்டார். விரைவில் கர்நாடக, தமிழக கூட்டு அதிரடிப்படை போலீஸார் வீரப்பனையும் பிடிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் மாறன்.
முன்னதாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிடுகிறோம்என்றார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
