2ம் உலகப்போரில் ஜப்பானின் கொடுமைகள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சாங்கி நகரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 59 வது பழைய ராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப்போரில்ஜப்பானிடம் போர்க் கைதியாக இருந்த பலர் பங்கேற்றனர்.
நேச நாடுகளின் (பிரிட்டன் ஆதரவு படைகள்) போர் வீரர்கள் பலரை ஜப்பான் நடத்திய விதம் குறித்து அவர்கள் நினைவு கூர்ந்தபோது அவர்களையறியாமல்கண்ணீர் பெருக்கெடுத்தது.
நகக்கண்ணை நீக்குதல், தலைகீழாக கட்டி தொங்கவிடுதல், மூச்சுதிணறும் அளவிற்கு முகத்தில் தண்ணீரை பீய்ச்சியடித்தல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளைபோர்க்கைதிகள் அனுபவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைதான எலிசபெத் சோய் மற்றும் அவரது கணவர் ஆகியோர் ஜப்பான் ராணுவக் காவல்படை தலைமையகத்தில்கொடுமைப்படுத்தப்பட்டனர்.
தற்போது சிங்கப்பூரின் தேசிய போர் வீராங்கனையாக கருதப்படும் சோய்யின் தலைமையில் இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து போர்க் கைதிகளும் சாங்கிநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மியூசியத்தில் மரக் கன்றுகளை நட்டனர்.
போர்க் கைதிகள் பலர் பர்மா - தாய்லாந்து ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தனர். சாங்கியிலிருந்து தான் பெரும்பாலான போர்க்கைதிகள் இப்பணிக்கு அனுப்பப்பட்டனர்.
200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், போர்க்கால கொடுமைகளை வெளியில் கூற பலர் விரும்பவில்லை. பலர் கொடுமை தாங்காமல்தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் அதனை நினைத்து கண்ணீர் விட்டனர்.
ஜப்பானை இது விஷயத்தில் மன்னித்து விட்டாலும் நடந்த கொடுமைகளை மறக்க முடியவில்லை என்கிறார் கைரோஸ். இவர் ஜப்பானிய கார்கள் எதையும்வாங்க விரும்பாத இவர் காலம் என்னும் அருமருந்து பலவகையில் மனக்காயங்களை ஆற்றியுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications