ஸ்டாலின் வழக்கு .. விசாரிக்க உத்தரவு
சென்னை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு சென்னைமுதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமூக சேவகர் எனக் கூறிக் கொள்ளும் செண்பகமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக உச்சநீதிமன்றம்அளித்துள்ள விளக்கங்களை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முதல்நிலை விசாரணையில் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி மார்ச் 8ம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளர்.
8 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படும். இவ்வழக்கின் விசாரணைக்கு தானாக நீதிமன்றத்தில் ஆஜரான மேயர் ஸ்டாலின்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உத்தரவிட கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications