வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரம்
சென்னை:
15 வருடங்களாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு தலைவலியாக இருந்து வரும் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.வீரப்பன் பிடிபட்டால் அது தேர்தலில் தி.மு.க.விற்கு அதிக பலத்தை கொடுக்கும் என்று கருதுவதால் போலீசாரின் வேட்டை தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, போலீசார் கைது செய்துள்ளதாக கூறும் தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவரான மாறனை பற்றிய கடலூர் போலீசாரின் வீடியோகாட்சிகளை காட்டும் போலீசார் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தியது பற்றிய தகவல் இல்லை.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனும் அதிரடிப்படை தலைவர் ஐ.ஜி.பாலசந்திரன், பூண்டி மலைப்பகுதி சீதைவனக் காட்டில் மாறன்பிடிபட்டதாகக் கூறுகிறார்.
வீரப்பன் தேடுதல் வேட்டை பற்றிய தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்து வருகிறது. கேரள காட்டில் வீரப்பன் இருப்பதாக தமிழக போலீஸ்கூறியதை கேரள அரசு மறுத்தது.
ஆனால், சில நாட்களுக்கு பிறகு, கேரளத்தின் வாலையாறு காட்டுப் பகுதியில் நடந்த சண்டையில் வீரப்பன் ஆட்களை சுட்டதாகவும், தப்பியோடிய அவர்கள்பணம், ஆயுதங்கள் மற்றும் பல விலை மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்கள் விட்டுச் சென்றதில் டிஜிட்டல் டைரியும் ஒன்று, அதில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் தொலைபேசி எண்கள் இருந்தது எனவும்தகவல்கள் வெளியாகின.
இது பற்றி அ.தி.மு.க.வின் ஜெயலலிதா கருத்து தெரிவித்த போது கருணாநிதியை காப்பாற்ற அந்த டைரி மறைக்கப்பட்டது எனவும், ஒரு நாள் கருகிப்போன ஒரு சடலத்தை கொண்டு வந்து இது தான் வீரப்பன் எனவும், அதிரடிப்படையுடன் நடந்த சண்டையில் அவன் இறந்ததாகவும் தெரிவிப்பார்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த போலீசார் கேரள காட்டில் சுடப்பட்டது வீரப்பன் கும்பல் அல்ல, வேறொரு கடத்தல் கும்பலாக இருக்கலாம் எனவிளக்கமளித்தனர்.
இந்நிலையில், வீரப்பன் கூட்டாளி மாறன் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகளிடம் விசாரித்ததில்வீரப்பன் மீண்டும் ஈரோடு காட்டுப்பகுதிக்கு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications