19 ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் கூட்டம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல்நாள்ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் உரை நிகழ்த்துகிறார்.
திங்கள்கிழமை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட எதிர்க்கட்சிகள் பல்வேறுபிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பிப்ரவரி 3 ம் தேதி தொடங்கும். அதே போல்இந்த ஆண்டும் பிப்ரவரி 19 ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.
முதல் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றும் போது நாடாளுமன்றத்தின் 2001 - 2002 ம் ஆண்டிற்கானதிட்டங்கள், மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவை குறித்து அறிவிப்பார்.
பின்னர் வெள்ளிக்கிழமை 23 ம் தேதி நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசின் பல்வேறு பொருளாதாரதிட்டங்கள் குறித்து விளக்குவார். இதுகுறித்தான ஆய்வறிக்கையையும் அவர் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்வார்.
பின்னர் 26 ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.அதற்குப்பின் 28 ம் தேதி மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், இந்தியாவின் பொருளாதார தேக்கநிலை, காஷ்மீர்பாதுகாப்பு, குஜராத் பூகம்ப நிவாரணம், மத்திய அரசின் புதிய விவசாயக் கொள்கை ஆகியவை குறித்து கேள்விஎழுப்பவுள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications