பா.ஜ.க. உறவை முறிக்க மாட்டோம் .. தி.மு.க.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் தமாகா வர வேண்டும் என்பதற்காக பாரதி ஜனதா கட்சியின் உறவை முறித்துக்கொள்ளக் கூடாது என்று தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தி.மு.க.வின் பொதுக் குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தல் திட்டங்கள்குறித்து விவாதிக்கப்பட்டதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
கட்சி தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன், சென்னை மேயர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளரும், கல்வித் துறைஅமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், சுகாதாரத் துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கூட்டத்தில்பங்கேற்றனர்.
பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது:
பா.ஜ.க.வுடனான உறவுகள் சுமுகமாக உள்ளது. த.மா.கா.உறவுக்காக பா.ஜ.க. வுடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது. தி.மு.க.ஏற்கனவே த.மா.கா.வை தி.மு.க. கூட்டணிக்கு அழைத்துள்ளது. பழனிவேல் ராஜனும், ஸ்டாலினும் மூப்பனாரை சந்தித்து பேசினர். ஆனால் மூப்பனார்எந்த விதமான பதிலும் கூறவில்லை.
இனியும் த.மா.கா.வுக்காக நாங்கள் காத்திருக்க முடியாது. அவர்கள் இடையே வந்து கூட்டணியில் இணைய விரும்பினாலும் வரவேற்கப்படுவார்கள்.
பொதுக்குழு உறுப்பினர்கள் த,மா.கா. கூட்டணியில் இணைவதை விரும்புகிறார்கள். த.மா.கா. இணையா விட்டாலும் கூட்டணியின் வெற்றி வாயப்புபாதிக்கப்படாது. எந்த கட்சியுடனும் ஆட்சி பங்கீடு கிடையாது.
காங்கிரசை நாங்கள் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க. அணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை போன்ற தலித் இயக்கங்கள் தி.மு.க.அணியில் விரும்பினால் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ள பா.ம.க. பா.ஜ.க.வை , அ.தி.மு.க. அணிக்கு அழைத்தது குறித்து கேள்விக்கு பதிலளித்த முதல்வர் இது தொடர்பாக மத்தியகிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயடு வெளியிட்ட அறிக்கையை நான் படித்தேன் என கூறினார்.
த.மா.கா. இன்னும் தி.மு.க.வின் அழைப்பு க்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்றாலும் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் இருக்கும் புதியதமிழகம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications