சண்டை நிறுத்தத்தால் பயனில்லை .. ஹூரியத்
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முழுவதுமாக தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சண்டை நிறுத்தத்தை நீடிக்க வேண்டும். வன்முறை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் சண்டை நிறுத்தம் அறிவித்து பயனில்லை என்று அகில இந்திய ஹூரியத் மாநாட்டு அமைப்பு மூத்த தலைவர் யாசின் மாலிக்சனிக்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவராகவும் இருக்கும் மாலிக் சனிக்கிழமை இதுகுறித்துக் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீரில் நவம்பர் 28 ம் தேதி சண்டை நிறுத்தம் அமல் படுத்தப்பட்டது. முதல் மாதத்தில் மட்டும் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர்ஜனவரி 26 ம் தேதி வரை நீட்டித்தார்கள். அப்போது மீண்டும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடங்கி விட்டது.
ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள், துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. அதற்குப்பின் பிப்ரவரி 26 ம் தேதி வரை சண்டை நிறுத்தத்தை நீட்டித்தார்கள்.தற்போது மீண்டும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
முதலில் சண்டை நிறுத்தத்தால் பயன் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். அதற்குப்பின் தான் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ், ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் இவ்விஷயத்தில் மிகவும் அவசரமாகச்செயல்படுகிறார்கள்.
சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும் போதும் வன்முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது சண்டை நிறுத்தம் என்பது தற்போதுகேலிக்குரியதாகி விட்டது.
காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் அது சண்டை நிறுத்தத்தால் மட்டுமேநிறைவேறி விடாது. வன்முறையே இல்லாமல் அமைதி ஏற்பட்டால் தான் சண்டை நிறுத்தம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் மாலிக்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications