த.மா.கா.விற்கு 40 சீட் தான் .. முதல்வர்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா வந்தால் 40 சீட்களுக்கு மேல் தர இயலாது என தி.மு.க. தலைவர் கருணாநிதிஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்த கருணாநிதி கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. விற்கு அளிக்கப்படும் 40 சீட்கள் தவிரகூடுதல் சீட்கள் அளிக்க இயலாது.
இது குறைவு என கருதி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. த.மா.கா. எம்.எல்.ஏ. அழகிரி, சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுடன் கூடுதல் சீட்கள் தேவை என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தற்போது சபாநாயகர் மதுரையில் இருப்பதால் தொகுதி உடன்பாடு குறித்து அக்கட்சியினர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழுவுடன் தான்பேச முடியும்.
தேவைப்பட்டால் நானும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடலாம். எனினும், தற்போது தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுடன்பேச்சுவார்த்தை நடத்தும் த.மா.கா. தலைவர்கள், இப் பேச்சுவார்த்தைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தெரியாது. த.மா.கா.தலைவர்கள் தி.மு.க.வுடன் நடத்தும் பேச்சுவார்த்தை த.மா.கா.வின் சார்பில் மட்டுமே நடைபெறுகிறது.
பிப்ரவரி 25 ம் தேதி தொகுதி பங்கீடு குறித்தான தேசிய ஜனநாயகக் கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் தேர்தலில் அ.தி.மு.ககூட்டணிதான் வெற்றியடையும். தி.மு.க வெற்றியடையாது என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்பதைமக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications